economics

img

ரெப்போ வட்டி விகிதம் 6.5% ஆக தொடரும்!

வங்கிகள் பெறும் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவிகிதமாக தொடரும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் இரு மாத நாணய கொள்கைக் குழுவின் கூட்டம் ஏப்ரல் 3-ஆம் தேதி தொடங்கிய நிலையில், இன்று நிறைவடைந்தது. இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ், குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவிகிதமாக தொடரும் என்று தெரிவித்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் உயர்த்தப்பட்டு, 6.25 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதம் 6.50 சதவீதமாக உயர்த்தப்பட்டது. கடந்த 2022-ஆம் ஆண்டு மே மாதம் முதல், 6 முறை ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி 250 புள்ளிகள் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.